Saturday, February 20, 2016

குதிரைவாலி சாம்பார் சாதம்

குதிரைவாலி சாம்பார் சாதம்

குதிரைவாலி  -  2 கப்
துவரம்பருப்பு -  1 கப்
புளி  - எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி  - 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
முருங்கைக்காய்  - 1
கத்திரிக்காய் - 2
சின்ன வெங்காயம் - 25
பீன்ஸ்  - 3
நெய்  - 2 ஸ்பூன்
எண்ணை - 2 ஸ்பூன்

வறுத்து அரைக்க:-

தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
கிராம்பு  - 2
பட்டை - 1 சிறு துண்டு
கடலை பருப்பு - 2 ஸ்பூன்
கொத்துமல்லி விதை - 1 ஸ்பூன்

தாளிக்க:-

கடுகு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
முந்திரி - 10
கறிவேப்பிலை
பெருங்காய பவுடர்


குதிரைவாலி, பருப்பு ஆகியவற்றை 2 முறை கழுவி வைக்கவும்  1: 3 என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 விசில் வைக்கவும்.

காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்கவும்

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை 1ஸ்பூன் எண்ணையில் சிவக்க வறுத்து அரைக்கவும்.

புளியை தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்

நெய் + எண்ணை சேர்த்து காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து நறுக்கிய காய்களை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். சாம்பார் பொடி, உப்பு , புளி கரைத்த நீர் , நறுககிய காய்களை சேர்க்கவும். காய்கள் வெந்ததும் அரைத்த மசாலா சேர்க்கவும். அத்துடன் வேகவைத்த குதிரைவாலிபருப்பு கலவையை சேர்க்கவும்.

மீதியுள்ள நெய் சேர்த்து நன்றாக கலந்து அப்பளம் அலலது சிப்ஸ்ஸுடன் பறிமாறவும்.


No comments: