Thursday, February 18, 2016

குதிரைவாலி பொங்கல்

குதிரைவாலி பொங்கல்

குதிரைவாலி - 100 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
இஞ்சி - 1 துண்டு
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
பெருங்காய பவுடர் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய் - 2ஸ்பூன்
எண்ணை - 2ஸ்பூன்

குதிரைவாலியை 30 நிமிடம் ஊற வைத்து வடிக்கவும். பாசிப்பருப்பை லேசாக வறுக்கவும்
1:4 என்ற அளவில் தண்ணீர் சேர்த்து 3 விசில் வைத்து எடுக்கவும்

கடாயில் நெய் + எண்ணை காய வைத்து மிளகு,சீரகம்,நறுக்கிய இஞ்சி,கறிவேப்பிலை,பெருங்காயபவுடர்
தாளித்து உப்பு சேர்த்து கலக்கவும். விருப்பப்பட்டால் முந்திரிபருப்பு  தாளிக்கவும்.

தேங்காய் சட்னியுடன் பறிமாறவும்.

No comments: