சர்க்கரை - 1/2 கிலோ
குங்குமப்பூ - 3-4 இதழ்
ஏலக்காய் பொடி - சிறிது
எலுமிச்சம்பழ ஜூஸ் - 2 ஸ்பூன்
தயிர் - 1 ஸ்பூன்
பாலை காய்ச்சி பொங்கியதும் அடுப்பை நிறுத்திவிட்டு எலுமிச்சை ஜூசை 1 ஸ்பூன் தண்ணீரில் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக் ஊற்றி கலந்துவிடவும். தயிரையும் 1 ஸ்பூன் தண்ணீரில் கலந்து பாலுடன் சேர்க்கவும். சில நிமிடங்களில் பால் திரிந்துவிடும்
திரிந்த பாலாடைய மெல்லிய காட்டன் துணியில் வடிகட்டவும். பின் தண்ணீர் சேர்த்து நன்றாக அலசவும். நன்றாக பிழிந்த்து பத்து நிமிடம் துணியுடன் தொங்கவிடவும்.
பின் அந்த பாலாடையை மிருதுவாக பிசையவும். சின்ன சின்ன உருண்டைகளாக அழுத்தாமல் உருட்டி வைக்கவும்.
குக்கரில் சர்க்கரையுடன் 1.5 லி தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். நன்றாக கொதித்ததும் உருட்டிய உருண்டைகளை மெதுவாக சேர்க்கவும். குக்கரை மூடி (விசில் வேண்டாம்) அரை மணி நேரம் வேகவிடவும். பின் ரசகுல்லாக்களை வேறு பாத்திரத்திற்கு மாற்றி ஏலக்காய் பொடி குங்குமப்பூ சேர்த்து பறிமாறவும்.
No comments:
Post a Comment