Saturday, August 16, 2014

ஓட்ஸ் இட்லி

ஓட்ஸ்  இட்லி 


தேவையான பொருட் கள் 

கோதுமை ரவை  - 1 கப் 
ஒட்ஸ்                      - 2 கப் 
புளித்த தயிர்          - 1/2 கப் 
பொடியாக நறுக்கிய  கேரட் ,பீன்ஸ் ,கோஸ் வெங்காயம்  தலா - 1 கப் 
கடுகு , கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன் 
பச்சை மிளகாய் பொடியாக  நறுக்கியது - 3
கறிவேப்பிலை,மல்லி தழை  சிறிது 
எண்ணை, உப்பு  - தேவையான அளவு 

ஓட்ஸை  மிக்சியில்  போட்டு  பொடித்துக் கொள்ளவும் 

கடையில் கடாயில்  எண்ணை விட்டு  கடுகு ,உ.பருப்பு,கே.பருப்பு தாளிக்கவும் 

பின்  மிளகாய்,கறிவேப்பிலை,பொடியாக நறுக்கிய  காய்கள் சேர்த்து வதக்கவும் 

பின்  கோதுமை ரவை,தயிர், பொடித்த ஓட்ஸ் , தாளித்த கலவை எல்லவற்றையும் சிறிது  தண்ணீர் சேர்த்து இட்லி மாவு  பதத்திற்கு கரைத்து  1/2 மணி நேரம் கழித்து இட்லி வார்க்கவும்.
மல்லி சட்னியுடன் சுவையாக இருக்கும் 

No comments: